வெளி தேசத்தில் ஒரு நகரம்... மகளிர் மன்றக் கூட்டம்... இந்தியப் பெண்கள் என்ற தலைப்பில் ஒருவன் பேச அழைக்கப்பட்டிருந்தான். அப்போது அவனுக்கு வயது முப்பது. அந்த வெளிநாட்டுப் பெண்கள் அவன் என்ன பேசிவிடப் போகிறான் என்ற இளக்காரத்துடன் அமர்ந்திருந்தனர். அந்தக் கூட்டத்தில் அறுபது வயதைக் தொட்ட பெண்களும் உண்டு; இருபது வயதைத் தொடாத இளைஞர்களும் உண்டு! அவன் பேசத் தொடங்கினான். இந்தியப் பண்பாடு, கலாச்சாரம், ஒழுக்கம், பெண்மையைப் போற்றும் பண்பு என அவனுடைய முழக்கம் இந்திய மண்ணின் மகத்துவத்தைப் பேசி முடித்தது. கூடியிருந்த பெண்கள் எல்லாம் வியந்து கைதட்டினர். அந்தக் கூட்டத்தில் இருந்த பதினெட்டு வயதுப் பெண் னொருத்தி அந்த முழக்கத்தைக் கேட்டு தன்னை இழந்தாள்! அதன்பின் அந்த தேசத்தில் அவன் எங்கு பேசினாலும் முன்வரிசையில் ஓடிச் சென்று அமர்ந்தாள். அவனுடைய அறிவு மேன்மையைக் கண்டு அனைவரும் வியந்து நின்றபோது அந்த பதினெட்டு வயதுப் பெண் மட்டும் அவனுடைய அழகில் மயங்கினாள். ஆம்! அவ னுடைய அறிவுக்குத் தலை வணங்கிய அவள், மெல்ல மெல்ல அவடைய அழகுக்கு அடிமையானாள்.
அவன் பல மாதங்கள் அந்த தேசத்தில் தங்கினான்; பல இடங்களில் பேசினான்; அவன் பேசிய அனைத்தும் உடனுக்குடன் நூல்களாக வெளிவந் தன. அந்த நூல்களை வாங்கி வரிவிடாமல் அந்த பதினெட்டு வயதுப் பெண் வாசித்தாள். முடிவில் அவனைச் சந் திக்க வேண்டும் என்று அவள் விரும் பினாள். அவளுடைய முயற்சிகள் எல்லாம் தோற்றன. கூட்டம் முடிந்தபின் சந்திக்கலாம் என்றால், அவனை பெருங்கூட்டம் சூழ்ந்து கொள்கிறது. கூட்டம் தொடங்குவதற்குமுன் சந்திக்கலாம் என்றால், கூட்டம் நடத்துவோர் அவளை அனுமதிக்கவில்லை. இப்படியே பல மாதங்கள் கடந்தன. ஒரு நாள் அவன் அந்தத் தேசத்திலிருந்து விடைபெறுவதாக பத்திரிகை செய்தி வந்தது. அதைப்படித்த அவள் விமான நிலையத்திற்கு ஓடினாள்... அங்கும் அவனைச் சுற்றி ஒரு கூட்டம்... இருப்பினும் தைரியத்தை வரவ ழைத்துக் கொண்டு அவன் முன் நின்றாள்... தனியாகப் பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்தாள்...
அவனும் அந்தப் பெண் சொல்வதைக் கேட்பதற்காக நண்பர்களிடமிருந்து விலகி நின்றன்.அந்தப் பதினெட்டு வயதுப் பெண், ‘என் அழகில் மயங்கி ஆயிரக்கணக்கான அமெரிக்க இளைஞர்கள் என்னை அன் றாடம் சுற்றுகின்றனர். ஆனால் உன் அறிவில் மயங்கி நான் உன்னை விரட்டிக் கொண்டிருக்கிறேன்’ என்றாள்.“அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்றான் அவன்!“நாம் இருவரும் திருமணம் செய்து, கொள்ள வேண்டும்” என்றாள் அவள்!“அப்படியா?” என்றான் அவன்.“ என் அழகும் உன் அறிவும் சேர்ந்து உலகமே வியக்கும் குழந்தை நமக்குப் பிறக்கும்” என்றாள் அவள்.
இதைக் கேட்டுச் சிரித்த அவன், “நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தை அழகான குழந்தையா? இல் லையா? என்பது அந்தக் குழந்தை பிறந்தவுடன் தெரிந்துவிடும். ஆனால் அந்தக் குழந்தை அறிவான குழந்தையா? என்பது அதற்கு இருபது வயதாகும் போதுதான் நமக்குத் தெரியும். இப்போதே என்னை நீ மகனாக ஏற்றுக் கொள்ளலாமே தாயே!” என்றான் அவன்.
அந்தப் பெண் பதில் கூற இயலாமல் தலைகுனிந்து நின்றாள். ஆம்! கண்ட பெண்களையெல்லாம் தாயாகக் கண்டு மகிழ்ந்த அவன்தான் சுவாமி விவேகானந்தர்!
1 comment:
இந்தியப் பெண்கள் என்ற தலைப்பில் ஒருவன் பேச அழைக்கப்பட்டிருந்தான்.
..... அவன் கொடுத்து வச்சவன்.... நாங்க...
Post a Comment