Friday, June 27, 2008

40,000 பயணிகளைக் காக்க வைத்த புஷ்

லண்டன்: கடந்த 15ம் தேதி இரண்டன் ஹ§த்ரோ வானூர்தி நிலையத்திலிருந்து பயணம் செய்யவிருந்த அல்லது அங்கு வந்திறங்க வேண்டிய 40 ஆயிரம் பயணிகள் அதிபர் புஷ்ஷை ஒருபோதம் மறக்கவே மாட்டார்கள், காரணம், அவர் வர தாமதமானதால் அந்த வானூர்தி நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய வானூர்திகள் தாமதமாயின அல்லது நீக்கம் செய்யப்பட்டன, மேலும் வந்திறங்க வேண்டிய வானூர்திகளும் வேறு வானூர்தி நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன.
புஷ் லண்டன் வந்தபோதும், அடுத்த நாள் புறப்பட்டபோதும் லண்டன் வரவேண்டிய 32 வானூர்திகளும், அங்கிருந்து புறப்படவேண்யடி 36 வானூர்திகளும் ரத்து செய்யப்பட்டன என்று பிரிட்டிஷ் வானூர்தி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். எத்தனை வானூர்திகள் தாமதமாகப் புறப்பட்டன என்று கணக்கிடப்படவில்லை. ஹ§த்ரோ வானூர்தி நிலையத்தில் நாள்தோறும் 1330 வானூர்திகள் வந்தது செல்கின்றன. இவ்வாறு அனைவரும் வந்து செல்லும் வானூர்தி நிலையத்துக்குப் பதில் போரப்படைக்குச் சொந்தமான வானூர்தி நிலையத்தில் புஷ் வானூர்தி இறங்க ஏற்பாடு செய்திருந்ததால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காதே என்று வானூர்தி நிலைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அது சரி! சென்னையில் கூடத்தான் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டு நம்மை ஆளுமு முக்கியமான தலைவர்கள் செல்லும்போது சாலையை வெறிச்சோடச் செய்து நம்மையெல்லாம் ஓரங்கட் வைத்துவிடுகிறார்கள், நாம் எங்கே போய் சொல்ல!

2 comments:

karnacartoon said...

¹w.... ªêŒî¶ êK... Üöè£ùõƒè÷ ð£‚赋ù£.... 裈F¼‚èˆî£¡ ªêŒò‹

karnacartoon said...

புஷ்.... செய்தது சரிதான்... அழகானவங்கள பாக்கணும்னா.... காத்திருக்கத்தான் செய்யனும்