சாலையில் நடந்து செல்லும் போது, அனைவரின் முகமும் ஒரு கணம், குறிப்பிட்ட ஒரு பெண்ணை மட்டும் அடிக்கடி திரும்பி பார்ப்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். அதற்கு காரணம், அவரது முகம் பளீச் தோற்றத்தில் இருப்பது தான். முக அழகை முறையாக பராமரிப்பது தான் இதற்கு காரணம். நீங்களும் அது போல் பிறரின் கவனத்தை கவர வேண்டுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்? இதோ சில பியூட்டி டிப்ஸ்...* தினமும் இரண்டு முறை முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். தசைகளை வலுவாக்கு வதுடன், ஈரப்படுத் தவும் வேண்டும். * எண்ணெய் தோலாக இருந்தால் ஜெல்லைகொண்டு சுத்தப்படுத்த வேண்டும். வறண்ட தோலாக இருந்தால் பாலை கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். இதன் மூலம் முகத்தில் படிந்துள்ள அழுக்கு அகற்றப்படுவதுடன், தோலினுள் உள்ள துளைகளும் மூடப்படும். * டோனிங் (toning) செய்வதன் மூலம் முகத்தின் தோலில் உள்ள துளைகளில் படிந் துள்ள அழுக்குகள் அகற்றப்படுவதுடன், துளைகளும் மூடப்படும். எனினும், எண்ணெய் தோல் உள்ளவர்கள் தான் டோனிங் களை பயன்படுத்த வேண்டும். இல்லை யெனில், முகம் கருமையடைந்து விடும் என தோல் சிகிச்சை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.* ஈரப்படுத்துதல்: முகத்தை ஈரப்படுத்தா விட்டால் பட்டு போன்ற தோலை நீங்கள் பெற முடியாது. அன்டி ஆக்ஸிடன்ட்கள் அடங்கிய moisturiser பயன்படுத்த வேண்டும்.* முகத்தை சொர சொரப்பாக தேய்ப்பதன் மூலம் இறந்த செல்கள் அகற்றப்படுவதுடன், புதிய செல்களும் உருவாகும். இதன் மூலம் ஆரோக்கியமான தோலை பெறலாம். உங்கள் முகத்தை வாரத்திற்கு ஒரு முறை, பொலிதீன் பிரஸ்களை கொண்டு மெதுவாக தேய்க்க வேண்டும். இதனால், பாதிப்பு ஏதும் ஏற்பட்டால் உடனடியாக தோல் சிகிச்சை நிபுணரை அணுகுவது நல்லது.* உங்களின் கூந்தல் ஆரோக்கியமாக இருக்க ஸ்பெஷலாக தயார் செய்யப் பட்ட ஷாம்பு மற்றும் கண்டி ஷனரை பயன்படுத்த வேண்டும். (உங்களுடைய சிகை அலங்கார நிபுணரிடம் எந்த மாதிரியான ஷாம்புவை பயன்படுத்த வேண்டும் என்று ஆலோசனை கேட்டுக் கொள்வது நல்லது). வாரத்திற்கு ஒரு முறை எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும். (ரோஸ்மெரி மற்றும் ஒலிவ் ஒயில் கலந்த கலவை) இதன் மூலம் உங்களின் முகம் பளபளப்பாக மின்னும்.* முகம் மட்டுமல்லாமல் கால் முழங்கை, கால், மூட்டுகள், குதிகால் ஆகியவற்றையும் பொலிவாக வைத்துக்கொள்ள, அவற்றையும் moisturiser பயன்படுத்தி சுத்தப்படுத்த வேண்டும். உங்கள் முகத்தை சொரசொரப் பான பொருளை கொண்டு சுத்தப்படுத்துவ தற்கு பதிலாக ஸ்பான்சை பயன்படுத்தலாம்.கால் பாதங்களை பேணிக் காப்பது எப்படி? * உடலின் பிற பாகங்கள் போன்று கால் பாதங்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வெதுவெதுப்பான தண்ணீரில், அரை கப் பாலை கலந்து அதில் பாதங்களை 5 நிமிடம் நனைக்க வேண்டும். பின்னர், உங்கள் காலை பார்த்தால் பளீரென தெரியும். * மாதத்திற்கு ஒரு முறை பெடிக்கியூர் மற்றும் மேனிக்கியூர் செய்து கொள்ள வேண்டும். * நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, எப்போதும் சன்ஸ்கீரின் பயன்படுத்த வேண்டும். அதே போல், வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தொப்பி அணிய வேண்டும்.* தினமும் குறைந்தது 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். * தினமும் குறைந்தபட்சம் 8 மணி நேரம் தூங்க வேண்டும். இதன் மூலம் தோல் சுருக்கமடைவதை தவிர்க்கலாம். அதே போல் மூலிகை கலந்த தேனீரை அருந்த தொடங்கினால், உடம்பில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படும்.
01.03.2012
14 years ago
1 comment:
புதிதாய் மலர்ந்த ரோஜாவை போன்று முகம் தெரிய என்ன செய்ய வேண்டும்
இதற்குப் பதில்
........................................................................ ...............................முதல்ல சொல்லுங்க...
இது உங்க போட்டாவா....
ப்ளீஸ் ரிப்ளை.
Post a Comment