Friday, July 25, 2008

30 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை

உலகின் முதலாவது சோதனைக் குழாய் குழந்தையான லூஸி பிறவுண், தனது 30 ஆவது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார்.

உலகங்குமுள்ள மில்லியன்கணக்கான குழந்தைகளற்ற தம்பதியினருக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் லூஸி பிறவுண், தனது கணவர் வெஸ்லி முலின்டர் மற்றும் 18 மாத குழந்தையான கமெரொன் ஆகியோருடன் இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார். இவர் 1978 ஆம் ஆண்டு ஜுலை 25 ஆம் திகதி இங்கிலாந்தின் ஓல்ட்ஹாமிலுள்ள மாவட்ட பொதுமருத்துவமனையில் பிறந்தார்.

No comments: