அதுநாள் வரை பூமி நிலையாக நிற்பதாகவும் சூரியன்தான் பூமியைச் சுற்றி வருவதாகவும் மக்கள் எண்ணிக் கொண்டி ருந்தனர். கலீலியோ தனது தொலைநோக்கி கொண்டு ஆராய்ந்து, சூரியன் நிலையாக நிற்கிறது; பூமிதான் அதைச் சுற்றி வருகிறது என்று கண்டறிந்து உலகுக்கு அறிவித்தார். வியாழன் கிரகத்தைச் சுற்றி மூன்று சந்திரன்கள் உள்ளன-ஒளியின் வேகத்தை அளக்கலாம். அதன் மூலம் ஒவ்வொரு கோளும் பூமியிலிருந்து எவ்வளவு தொலை வில் இருக்கிறது எனக் கணக்கிடலாம்.
சூரியனிலிருந்து வெளிப்படும் கரும்புள்ளிகள் உண்மையில் நெருப்புச் சூறாவளிகள். அவை சூரியனின் ஒளிப்பிழம்பை பிய்த்துக் கொண்டு வெளி வருகின்றன-என்றெல்லாம் இவர் கண்டறிந்து சொன்ன வானியல் உண்மைகளை அன்றைய மதவாதிகள் ஏற்க மறுத்து, எதிர்த்தனர். அறிவுள்ள மக்கள் கலீலியோவின் ஆராய்ச்சி உண்மைகளை வியந்து போற்றி னர். பிற்போக்கு மதவாதிகளோ பிரச்சனையைக் கிளப்பினர்.
'இகத்திற்கும் பரத்திற்கும் நல்வழி காட்டும் சமய நூலான பைபிளுக்கு விரோதமாக கலீலியோ பேசுகிறார். கருணைக் கடல் ஏசுநாதரை விட தாம் அதிகமாக உணர்ந்துவிட்டதாக அகந்தை கொண்டிருக்கிறார்' என்றனர். கலீலியோ, 'பைபிளானது விஞ்ஞான அறிவை கற்றுத்தர ஏற்பட்ட நூலல்ல. அது மனித இனம் ஆண்டவனை அடைய வழிகூறும் நூல்' என்று விளக்கினார்.
எனினும் மதவெறியர்களின் எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வந்தது. அவர்கள் பழமை மீதிருந்த பாசத்தால் பகுத்தறிவைப் படு குழியில் தள்ளிவிட்டு பல பொய்க் குற்றச்சாட்டு களை தயார் செய்து போப்பாண்டவரிடம் ஒரு பட்டி யலை சமர்ப்பித்தனர். கிறித்தவ சமய போதகர்கள் பெரும்பாலோரின் முடிவுக் கிணங்க கலீலியோ குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டது.
அவர், 'இனி கலீலியோ எவரிடமும் தன் கருத்துக்களை எடுத்துரைக்கக் கூடாது. இன்றேல் தண்டிக்கப்படுவார்!' என்று ஆணையிட்டார். கலீலியோ ஓரிரு நாட்கள் போப்பாண்டவரின் கட்டளைக்கிணங்க ஆராய்ச்சி செய்யாது அடங்கிக் கிடந்தார். மூன்றாம் நாளே தன் ஆய்வுகளை ரகசியமாக செய்யத் தொடங்கினார். தான் கண்டறிந்த புதிய உண்மைகளை புத்தகமாக எழுதினார். பொதுமக்களிடம் விநியோகித்தார்.
கலீலியோவின் நூல் நாட்டில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அவரது துணிச்சலைக் கண்டு பகைவர்கள் அதுதான் தக்க வாய்ப்பு என்று எண்ணி, 'எந்த கருத்துக்களை சொல்லக் கூடாது என்று போப் கட்டளையிட்டாரோ, அதையே நூல் வடிவில் கொண்டு வந்து விட்டாரே' என்று கூறி அவரை சிறைப்பிடிக்க செய்தனர். சிறைப்பட்ட அன்றே அவர் ரோமாபுரி யின் சிறைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு மூன்று, நான்கு நாட்கள் விசார ணைக்குப் பின், “அவர் தமது நூலில் பூமியை சூரியன் சுற்றுவதில்லை என்று தெளிவாக அறிவிக்கவில்லை.
எனவே அவருடைய கருத்து பைபிளுக்கு விரோதமானது!Ó என்று குற்றம் சாட்டி அவருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது எழுபது. அவர் மிகுந்த துன்பங்களைச் சிறையில் அனுபவித்தார். 22 நாட்கள் கொடிய சிறைவாசத்திற்கு பின் ‘பெல்லார்மன்’ என்ற கார்டினரின் (பாதிரியார்) பெரும் முயற்சியால் கலீலியோ ‘சீயன்னா’ என்ற நகருக்குச் சென்றுவிட வேண்டுமென்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
நாடு கடத்தப்பட்ட கலீலியோ உடனே குடும்பத்தோடு சீயன்னா சென்றார். அங்கு தம் எஞ்சிய வாழ்நாளில் என்னென்ன தீமைகள் நேருமோ என்று வேதனையுற்றார். அந்நிலையில் வறுமை அவரை முழுதும் ஆட்கொண்டது. உடல் உருக்குலைந்தது. உள்ளம் சோர்ந்தது. அதோடு அவரது செல்வமகளும் பசியால் நோய்வாய்ப்பட்டு மரமணமடைந்தார். தனது துன்ப வாழ்வின் துயருக்கெல்லாம் உறுதுணையாக இருந்து வந்த மகளின் மரணத்தால் அவர் வாழ்வில் வெறுப்புற்றார். பின்னர், அவர் பார்வையை இழந்து குருடானார். செவிடும் ஆனார்.
கடைசியாக 1642ம் ஆண்டு ஜனவரி 8ம் நாள் தமது 78ம் வயதில் கலீலியோ காலமானார். அவர் இறந்தபோது யாரும் நினைவுச் சின்னம் எழுப்பவில்லை. ஏனெனில் அவர் ஒரு சிறைக் கைதியாக இருந்தார் என்ற காரணமாகும். கடிகாரம், தொலைநோக்கி ஆகிய கருவி களைக் கண்டுபிடித்து, பல வானியல் உண்மைகளை ஊருக்கு அறிவித்த அந்த மேதையை இன்று மனிதகுலமே போற்றுகிறது.
உண்மை அழிவதில்லை!
ஆர்.சி.சம்பத்
No comments:
Post a Comment