Thursday, April 15, 2010

ஓவியக் கலைஞர்களின் போராட்டாம்

சென்னையில் கவின் கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தங்களுடை கல்லூரி முதல்வரை பணிநீக்கம் செய்யுமாறு 22.03.10 மற்றும் 23.03.10 உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். அவர்கள் தங்கள் கல்லூரி முதல்வருக்கு அந்த பொறுப்பிற்கான எந்த தகுதியும் இல்லை என்றும், அவர் மாணவர்களுக்குள் சாதி சண்டையை உருவாக்குகிறார் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள்.மாணவர்கள் எந்த கோரிக்கையோடு கல்லூரி முதல்வரை சந்தித்தாலும் பிரச்சனை பற்றி சிந்திக்காமல் அந்த மாணவர்களை மிரட்டுவது, பெற்றோர்களிடம் அம்மாணவர்களைப் பற்றி தவறான தகவல்களை கூறுவது முதல்வரின் செயல்பாடாக உள்ளது. இதற்காக அவர் அலுவலகத்தில் ஒரு குழுவை வைத்திருக்கின்றார்.


இந்த குழு, தேவைகளை கேட்டு செல்லும் மாணவர்களை மிரட்டுவதோடு அல்லாமல் மற்ற மாணவர்களிடம் இருந்து அம்மாணவர்களை தனிமைப்படுத்தும் வேலைகளை செய்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் கடந்த வாரத்தில் மாலை நேரத்தில் கல்லூரி முதல்வரின் கார் உடைக்கப்பட்ட சத்தம் கேட்டு வந்து பார்த்த மாணவர்கள் வேறொரு மாணவரின் பெயரை அங்கு சொன்னார்கள் அவன் தான் கல்லூரி முதல்வரின் மேல் உள்ள கோவத்தால் கண்ணாடியை உடைத்தான் என்று, ஆனால் அவரோ மாணவர் எஸ்வந்திரன், ஆனந்த் குமார் இருவரும் தனன் கண்ணாடியை உடைத்தார்கள் என்று போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

போலீசார் விசாரணையின்றி மாணவர்கள் இருவரையும் குற்றவாளிகளைப் போல கைவிலங்கிடப்பட்டு, ஓர் இரவு முழுக்க காவல் நிலையத்தில் வதைக்கப்பட்டனர். எஸ்வந்திரன் பிணையில் வெளிவர முடியாத வழக்கு புனையப்பட்டு புழல் சிறையில் தள்ளப்பட்டார். எந்தப் பிரிசீலனையும் இல்லை. எந்த விசாரணையும் இல்லை. நியாயத்தின் நிழல் கூடத் தலைகாட்ட வாய்ப்பு கிட்டவில்லை. கலைஞர்கள் மீதான நியாயமற்ற இக்கொடூரத் தாக்குதலைக் கணடிக்காமல் விடுவது அதிகார நோய்க்கூற்றை உறுத்தலின்றி உலவ அனுமதிக்கும் பெரும்பிழையாகி விடும்.

இம்மாணவர்களுக்காக இக்கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் கடந்த ஞாயிறன்று காலை முதல் மாலை வரை ஓவியம் வரைந்து போராட்டம் நடத்தினர்.பொய் வழக்குகளை வாபஸ் வாங்கக் கோரியும் பொய் வழக்கு போடத்தூண்டிய தற்காலிக முதல்வர் மனோகரன் மீதும் பொய் வழக்கு போட்ட காவல் துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் திங்களன்று போராட்டம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 150 மாணவர்களுக்கு மேல் கலந்து கொண்டனர். இப்போராட்டம் காலை முதல் இரவு வரை தொடர்ந்து. சில மணவர்கள், மாணவிகளும் இரவு வீட்டுக்குச் சென்று மறுநாள் காலை வந்தனர்.
மறுநாள் மாணவர்களை உள்ளே விடாமல் போலீசார் கேட்டை பூட்டிவிட்டனர். இதனால் மாணவர்கள் அனைவரும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் என்று அறிவித்தனர். கேட்டிற்கு வெளியே இருந்தது நிறைய மாணவிகள் தான். வெளியில் இருந்தபடி இவர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

மாணவர்கள் அன்று முழுவதும் உண்ணாநிலையில் இருந்து போராட்டம் செய்தனர். போலீசாரோ கல்லூரி நிர்வாகத்திற்குதான் உதவி செய்தது.
அன்று மாலை சுமார் 6.30 மணியளவில் மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அம்மாணவர்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு எங்கு போகவேண்டும் என்று அவர்களுக்கே தெரியவில்லை. அவர்களை ஏற்றி சென்ற வண்டி எழும்பூர் ரயில் நிலையம் அருகே சென்ற போது மாணவர்கள் எங்கு செல்கிறோம் என்று கேட்க. அவர்களுக்கு தெரியவில்லை, போன் பேசிவிட்டு அப்புறம் சேப்பாக்கம் அருகே ஒரு மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இரவு 8 மணியளவில் போலீசார் மாணவர்களை நீங்கள் செல்லலாம் ஆனால் 25 மாணவர்கள் மட்டும் இருப்பார்கள் என்று சொல்ல. மற்ற மாணவர்கள் சென்றால் அனைவரும் செல்வோம் இல்லாவிட்டால் நாங்களும் இருப்போம் என்று கூறினர். அதோடு எங்களது கோரிக்கையும் நிறைவேற்றப்படவேண்டும் என்று கூறினர்.

போலீசார் அனைத்து மாணவர்களையும் விடுதலை செய்தனர். அனைவர்கள் அனைவரும் கல்லூரிக்கு நடைபயணமாக வந்தனர். அங்கு வந்ததும் மாணவர்களிடம் எழும்பூர் துணை காவல் ஆணையாளர், அக்கல்லூரி ஆசிரியர்களும் இன்னும் இரண்டு நாட்களில் கல்லூரி இயங்கும் என்றும் ஏப்ரல் மாதம் முழுவதும் கல்லூரி செயல்படும் என்றும் மே துவக்கத்தில் தேர்வு என்றும் அறிவித்தார். இதனால் மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

ஆனால் மறுநாளே கல்லூரி கேட்டின் மீது கல்லூரி கலவரையற்ற விடுமுறை என்று அறிவித்திருந்தது. மாணவர்கள் இதை நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் மாணவர்களோ கல்லூரியை திறக்கும் முயற்சியில் இறங்கினர். அவர்கள் அமைச்சர் ஒருவரையும் பார்த்து கல்லூரியை திறக்க வேண்டும என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் அவரும் இவர்களுக்கு உதவவில்லை. மாணவர்கள் தொடர்ந்து மெமோரியல் ஹால் எரிதில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கும் பலன் இல்லை.இனி என்றைக்கு கல்லூரி திறக்கும் என்று மாணவர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். அரசு மிக விரைவில் இதற்கு ஒரு தீர்வு காணவேண்டும். மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் நடத்தால் நன்று.

No comments: